Posts

Showing posts from January, 2024

மனைக்கு ஆகா விருட்சங்கள், இரவிற்கு ஆகா போசனங்கள்..

Image
தமிழகத்தில் தோன்றிய அருட்பெருஞ் சித்தர்கள் தங்கள் ஞானத்தால்  கண்டறிந்த பிரபஞ்ச இரகசிய விதிகளின் உண்மைகளை, உலக மக்க  ளெல்லாம் அறிந்து கொண்டு பயன்பெறவும், அறம், பொருள், இன்பம், என்ற மூன்று வகைப்பேரினையும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும், என்ற பேரருள் எண்ணங்களுடன் வாழ்வியல் தத்துவங்களையும், கோட்பாடுகளையும் வகுத்து சுவடிகளில் பதிப்பித்துள்ளனர். இன்றைய வாழ்வியல் சூழ்நிலைக்கு உகந்த, மிகவும் தேவையான  இரண்டு வித தலைப்புகளில் விளக்கம் காணலாம்.  (1) மனைக்கு ஆகா விருட்சங்கள். (2) இரவில் ஆகா போசனங்கள். பருத்தியகத்திபனை நாவலத்தியும் எருக்குவெள்ளெருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்சமும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூமத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட் சமும் உதிரவேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்சமும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே  குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசா திராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல்...