Posts

Showing posts with the label thokkanam

சித்த மருத்துவதில் தொக்கணம்..!!

Image
வெளிப்பிரயோக மருந்துகளும் (உடலுக்கு வெளியே பூசிக் கொள்ளும் மருந்துகள் உள்பட) முப்பத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இம்மருந்துகளை புறமருந்துகள் என்றும் சொல்வார்கள். - புறமருந்துகளில் ஒன்றான தொக்கணம் என்பது, உடலில் மருந்து எண்ணெய்களை ஒரு குறிப்பிட்ட வெதுவெதுப்பான பதத்தில் தேய்த்து அழுத்துவதும், பிடித்து விடுவதுமாகும். தொக்கணம் செய்யும் போது பயன்படுத்தும் மருந்து எண்ணெய்கள் பொறுத்து வாத, பித்த, கப நோய்கள் தீரும் என்றாலும், வாத நோய்களுக்கென்றே சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. தொக்கணத்தை ஒன்பது வகைகளாக விளக்கியுள்ளனர். தட்டுதல் அல்லது குத்துதல் : நோயுற்ற இடத்துக்குத் தகுந்தவாறு நோயாளியை உட்கார வைத்தோ, படுக்க வைத்தோ, ஒரு பக்கமாகப் படுக்க வைத்தோ, மருத்துவ எண்ணெய்கள் தடவி தட்டவோ குத்தவோ செய்யலாம். இந்தத் தட்டுதலை மந்தம், மத்திமம், சண்டகம் என கொடுக்கப்படும் வேகத்தைப் பொறுத்து மூன்றாகப் பிரிக்கலாம். இறுக்குதல் : குறிப்பிட்ட பாகங்களில் மருந்து தைலங்களைத் தடவி இறுக்குவதாகும். மென்மையான பாகங்களையும், மெலிந்த எலும்புகளை உடைய பகுதிகளையும் இறுக்குவது கூடாது. பிடித்தல் : மருந்து தைலங்களைத் தடவி, ப...