குண்டலினி சக்தியை விழிக்க செய்யும் அபூர்வ காயகல்ப மூலிகைகள்..!!
(உலகிலேயே அனைத்து தலை சிறந்த சித்த வைத்தியர்களை கொண்டு , முறையாக காப்புகட்டி சாப நிவர்த்தி செய்து பெறப்பட ஒரு லட்சம் சஞ்சீவினி மூலிகைகளை கொண்டு ஒரு லட்சம் மஹா மிருத்யஞ்சய ஜெபத்துடன் இலங்கையில் களுதாவளை மண்ணில் 2018 நவம்பர் மாதத்தில் நான்கு நாட்கள் நடந்த மாபெரும் மந்திர கல்ப ருத்ர வேள்வி நடைபெற்றது. அந்த வேள்வியில் பயன்பட்ட சில அபூர்வ மூலிகைகள் பற்றிய ரகசியங்களையே இந்த சிறப்பு பதிவில் இன்று இடுகிறேன்.)
குண்டலினி சுரப்பியில்தான் அமானுஷ்ய சக்தி இருக்கிறது. இதை தூண்டும் உணவை குண்டலினி சக்தி பயிற்சி பெறுபவர்கள் மேற்கொள்வது நல்லது. அப்படிப்பட்ட உணவுகளுக்கு பெயர்தான் காயகல்ப மூலிகைகள் ஆகும்.
காயகல்ப மூலிகைகள் நிறைய இருக்கின்றன.. ஒவ்வொரு காயகல்ப மூலிகையிலும் ஒவ்வொருவிதமான இயக்க ஆற்றல் (எலக்ட்ரான்கள்) இருக்கின்றன.
எந்த மூலிகையில் மிக மிக அதிகமான இயக்க ஆற்றல்-எலெக்ட்ரான்-பிராண சக்தி உள்ளதோ, எந்தெந்த மூலிகையில் மிக மிக அதிகமான பாஸ்பரஸ் தனிமம் இருக்கிறதோ,
அதுவே மிக சிறந்த காயகல்ப மூலிகையாக நமது சித்தர்கள் பகுத்து வைத்துள்ளனர்.
அவற்றை உட்கொண்டால் வெகு விரைவில் அமானுஸ்ய சக்தி பெறலாம்.
அப்படிப்பட்ட மூலிகைகள் பட்டியல்:
1.பொற்சீந்தில்
2.விழுதி இலைக்கிழங்கு
3.பேய்சுரை
4.சர்க்கரை வேம்பு
5.கஞ்சா
6.கருநெல்லி
7.வெள்ளைப்பூ தூதுவளை
8.அழுக்கண்ணி
9.நத்தைச்சூரி விதை
10.நாகதாளி
11.சாயா விருட்சம்
12.ஜோதி விருட்சம்
13.சுணங்கி விருட்சம்
14.செங்கற்றாழை
15.கிளிமூக்கு பழம்
16.சஞ்சீவி மூலிகை
17.அமுரி உப்பு
18.சக்தி சாரணை
19.ஓமம்
20.வல்லாரை
இந்த மூலிகைகளில் பிராணா சக்தியும், பாஸ்பரஸ் சக்தியும் மிக அதிகம். இதை உண்பதன் மூலம் நமது குண்டலினி ஆழ்மனம் பாஸ்பரஸ் ஆக்சைடு விழிப்படையும். இதற்காகவே கொல்லிமலை, சதுரகிரி போன்ற மூலிகை வனங்களில் நம் சித்தர்கள் தேடி அலைந்து இவைகளை சேகரித்தனர். பல சித்துக்களையும் செய்தனர்.
ஆனால் இவற்றை உண்பதில் நிறைய விதி முறை இருக்கிறது.
சாதாரண உணவை சாப்பிடுவது போல இதை உண்ண முடியாது. காரணம் இவை அதிக வீரிய சக்தி கொண்டவை. கொஞ்சம் அதிகம் ஆனாலும் உடல் சூடு அதிகமாகி மண்டைக்காய்ச்சல் ஏற்பட்டு புத்தி பேதலித்துவிடும் என சித்தர்கள் எச்சரிக்கின்றனர்.
மனிதனின் தலைஎழுத்தை மாற்றும் சித்தர்களின் அபூர்வ காயசித்தி மூலிகைகளுக்கு உண்டு.
சித்தர்கள் காயகற்பங்களை உண்டு தங்களின் உடலுக்கு நோய்கள் வராமலும், தங்களின் உடலை வலுவூட்டவும் செய்தனர். தனி மூலிகைகளைக் கொண்டே காயகற்பம் செய்தனர். அவ்வாறு சித்தர்கள் எடுத்துக்கொண்ட சித்தர்களின் மூலிகை காயகற்பங்கலாவன,
🔹️ அகத்தியர் 100 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.
🔹️ கோரக்கர் கஞ்சா மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர், கஞ்சா மூலிகை உட்பட 90 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.
🔹️ நந்தீசர் 100 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.
🔹️ ரோமரிசி 71 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.
🔹️ குகைகன்னார் 71 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.
🔹️ மச்சமுனி வல்லாரை மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர், வல்லாரை மூலிகை உட்பட 71 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.
🔹️ ராமதேவர் 71 மூலிகை காயகற்பங்களை உண்டவர், முக்கிய மூலிகையாக கருநீலி கற்பம் உண்டார்.
🔹️ திருமூலர் 66 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.
🔹️ போகர் கொல்லங்கோவை மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர், கொல்லங்கோவை மூலிகை உட்பட 44 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.
🔹️ சட்டமுனி 21 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.
🔹️ கொங்கணர் பொற்றிலைக்கையான் மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர், பொற்றிலைக்கையான் மூலிகை உட்பட 16 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.
🔹️ காளங்கிநாதர் சிவகரந்தை மூலிகையை கற்பம் செய்து உண்டவர்.
🔹️ சிவயோகி கரிசாலை மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர்.
🔹️ கஞ்சமலை கருநீலி மூலிகையை கற்பம் செய்து உண்டவர்.
🔹️ பதஞ்சலி செருப்படை மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர்.
🔹️ பத்தர் செங்கற்றாழையை கற்பம் செய்து உண்டவர்.
நரை, திரை, மூப்பு, சாக்காடு வெல்ல நம் சித்தர்கள் பல அரிய மூலிகைகளை பயன்படுத்தினர். மக்கள் நலனுக்காக ப்ரமரிஷி மலையில் சித்தர்கள் பயன்படுத்திய சில அபூர்வ மூலிகைகளின் பெயர்களை இங்கே தொகுத்துள்ளோம். இதன் பெயர்கள்...
அழுகண்ணி
தொழுகண்ணி
கணைஎருமை விருட்சம்
தில்லை விருட்சம்
சதுரமரம்
தும்புராமரம்
அரி நெல்லிமரம்
சரள தேவதாருமரம்
சோதி விருட்சம்
கருவாழை
கருஊமத்தை
மலை அரளி
பப்பரப்புளிய மரம் - பஞ்சவேதி
சோம விருட்சம்
எட்டி மரம்
வெள்ளெருக்கு மரம்
சிகப்பு கீழ்க்காய் நெல்லி
குங்கிலிய மரம்
தான்றி மரம்
காயா மரம்
சிகப்பு தூதுவேளை
செங்கரிப்பான்
சர்க்கரை வேம்பு
வன்னி மரம்
தேவதாருமரம்
இந்திர வீர மரம்
வேம்பின் மேற் புல்லுருவி
கல்லத்தி மரம்
குருக்கத்தி மரம்
சேங்கொட்டை மரம்
சீந்தில் கொடிகள்
வேர்ப்பலா மரம்
கருங்கொடு வேலி
கருந்துத்தி
செந்தகரை
செங்கடுக்காய் மரம்
வெள்ளைப் பணல் முருங்கை
பேய்ச்சுரை
குருவரிக்கற்றாழை
மஞ்சள்பூ தைவேளை
செங்கற்றாழை
செந்நாயுருவி
அமிர்தவள்ளி
உரோம விருட்சம்
கருநெல்லி மரம்
நாகப்படக் கற்றாழை
வெண்நாவல்
வனப்பிரமி
முப்பிரண்டை
கரிப்பான்
சோதிப் புற்கள்
சிவந்த இலைக்கள்ளி
செங்கொடிவேலி
சாயா விருட்சம்
சேர்ந்தாடும் பாவை
பஞ்சதரு
சஞ்சீவி மூலி
உரோம வேங்கை மரம்
இருப்பவல் செடி
கணங்க விருட்சம்
பவளத்துத்தி
கருநொச்சி
கருநாரத்தை
நாகதாளி
சிவந்தபுனல் முருங்கை
பால்ப்பட்டை
அகில் மரம்
பாதிரி மரம்
கடுக்காய் மரம்
தேற்றான் மரம்
கரப்புன்னை
கல் தாமரை
முண்டக விருட்சம்
சிறியா நங்கை
ஆயில் மரம்
மயிலை மரம்
பிறாய் மரம்
கெட்டிவஞ்சி மரம்
கொஞ்சி மரம்
தொனியா மரம்
பிர்மதரு
கருக்குவாச்சி மரம்
ஊக்குணா மரம்
கைவலாக்கை மரம்
கணங்க விருட்சம்
பொற் சீந்தில்
வெண் துத்தி
திருகுக்கள்ளி
மிளகரணை
கானற்பலா
வெள்ளை வேம்பு
இரத்தப்பலாசு மரம்
நேத்திரஞ்சிமிட்டி
வல்லாரை
சிவனார் வேம்பு
வெள்ளை நீர்முள்ளி
ஓரிலை தாமரை
பூமி சர்க்கரைகிழங்கு
ஆடு தின்னாப்பாளை
ஆடாதோடை
சீதா செங்கழுநீர்
செவ்வாழை
நெல்லி மரம்
வேலிப்பருத்தி கொடிகள்
துத்திச்செடிகள்
சத்திரப்பூடு
பொற்றலைக்கையான்
பாற்சொரி மரம்
வரை ஆலமரம்
செவ்வள்ளிக்கொடி
பலூனி மரம்
செங்கும்ரி
வரை ஆலமரம்
கருங்கரிப்பான்
செந்தும்பை
கருந்தாமரை
குமரிக்கற்றாழை
பொற்பூ தைவேளை
நாகதாளிக்கள்ளி
🌿 அதிகாயசித்தி மூலிகைகள்:
பொற்சீந்தில்
விழுதி இலை
பேய்ச் சுரை
சர்க்கரை வேம்பு
கருப்புச்சித்திர மூலம்
வெள்ளைப்பூ தூதுவேளை
பேய்க்கடலை
கருமருது
கருஞ்சிற்றகத்தி
கரு நெல்லி
நாகதாளி
நாறுகரந்தை
மால்தேவி விதை
திருமூலர் பெருமான் அருளிய 45 கற்பக மூலிகைகளின் பாடல்!!!
திருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்பக மூலிகைகள் என்ற தலைப்பில் கூறிய பாடலாகும் –
"கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
காளென்ற, 5 கரிய கரிசா லையோடு
6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி
10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா" (1)
"செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
18 சிவந்தகற்றாழை 19 செஞ்சித்திர மூலம்
நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
நலமான 20 கற்பிரபி 21 கற்சேம் பாகும்
பரந்திராய் 22 கல்லுத்தா மரையி னோடு
பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி
மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே" (2)
"மிடுக்கான குண்டலமாம் 29 பாலை யோடு
30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு
33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அழுகண்ணி
கெடியான 37 பொன்மத்தை 38 மதுர கோவை
படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே" (3)
"தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும்
ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)
"சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
மத்தான மன்மதன்போல் தேகமாகும்
மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
அண்டரண்டபதமெல்லாம் அறிய
லாமே." (5)
இப்பாடலின் படி நாற்பத்தைந்து கற்பக மூலிகைகளினைக் கூறியுள்ளார்.மேலும் இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர்களிற்கு சாவு இல்லை என்றும் மேலும் மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும்; முடி நரைக்காது; தோல் சுருங்காது; உடல் மூப்பு அடையாது; மலைகளில் எளிதாக ஏறலாம். மூச்சு இரைக்காது. விண்வெளியில் உலாவலாம். வான மண்டலத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர மண்டல அடுக்குகளைப் பார்க்கலாம். போன்ற கூற்றுக்களும் மேலும் இம்மூலிகைகளின் சாற்றினால் அறுபத்து நான்கு பாஷாணங்களின் கட்டு உண்டாகும் எனவும் இவற்றின் ரசம் கட்டியாய் மூலிகை மணியாகும் எனவும் கூறுகின்றனர்.

Comments
Post a Comment