ஸ்ரீ வரலட்சுமி விரதம் அனுஷ்டிப்பதன் மகிமை..!!
ஸ்ரீ வரலட்சுமி நோன்பு (Varalakshmi Pooja) என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான ஸ்ரீ மஹா லட்சுமியின் அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் விரதமாகும். இந்த விரதம் ஆடி மாதம் வளர் பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கடைபிடிக்கப்படுகிறது.
லட்சுமி என்றால் செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம், அழகு எனப் பல அர்த்தங்கள் உண்டு. ஏனெனில், ஸ்ரீலட்சுமிதேவியை இந்த நாளில் விரதம் மேற்கொண்டு வழிபட்டால், இவை அனைத்தையுமே தந்து நம்மை மகிழச் செய்வாள், தேவி!
தூய்மையின் பிறப்பிடம் அவள். எனவே, வீட்டையும் நம்முடைய மனத்தையும் தூய்மையாக்கிக் கொள்வது சிறப்பு. தூய்மையான ஆடை உடுத்தி, சுத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்து, நிறைந்த மனமும் மகிழ்ச்சியும் மேலிட, அவளை ஆராதிப்பது மிகுந்த பலனைத் தரும்!
வீட்டுச் சுவரைச் சுத்தப்படுத்தி, அதில் ஸ்ரீமகாலட்சுமியின் திருவுருவத்தை வரைந்து வழிபடுவார்கள் சிலர். கலசத்தில் அவளின் திருமுகத்தைத் தீட்டிக்கொள்ள வேண்டும். அந்தக் கலசத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, ஏலக்காய், ஜாதிக்காய், ஜாதிபத்திரம், லவங்கம், பச்சைக் கற்பூரம் முதலான பரிமள (தூய்மையான) பொருட்களைச் சேர்த்து, கலசத்தின் மேலே தேங்காய் மற்றும் மாவிலையால் அலங்கரித்து, வழிபாட்டில் வைத்து, 'அம்மா மகாலட்சுமி தாயே! எங்கள் வீட்டுக்கு வாம்மா! எங்கள் குடும்பத்தாரை ஆசீர்வாதம் செய்யம்மா!’ என்று மனதாரப் பிரார்த்தித்து, பூஜையைத் துவக்குங்கள். இந்த வேளையில், ஸ்ரீமந் நாராயணனையும் சேர்த்து பூஜிப்பது சிலரின் வழக்கம்.
பாற்கடலில் தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி, மேரு மலையை மத்தாகவும் வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் வைத்துக் கடைந்தபோது, உயர்ந்த பல விஷயங்கள் உதித்தன. அந்தத் தருணத்தில் தோன்றியவளே ஸ்ரீமகாலட்சுமி. வாழ்வில், மனிதருக்குத் தேவையான உயர்ந்த விஷயங்கள் அனைத்தையும் தந்தருளக்கூடியவள் அவள். ஆகவே, பாற்கடலில் இருந்து ஸ்ரீமகாலட்சுமி உதித்ததில் வியப்பொன்றும் இல்லை! அவள் உதித்த நன்னாளை, வரலட்சுமி விரத நாளாக அனுஷ்டிக்கிறோம்.
வருடந்தோறும், ஆடி மாதம் அமாவாசையில் இருந்து பௌர்ணமி தினத்துக்குள் வரக்கூடிய வெள்ளிக் கிழமை அன்று, ஸ்ரீவரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. எனில், இரண்டு வெள்ளிக்கிழமைகள் வருமே என்கிறீர்களா?! பௌர்ணமிக்கு அருகில், அதாவது பௌர்ணமி தினத்துக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையை, வரலட்சுமி பூஜைக்குரிய நாளாகக் கொள்ளவேண்டும்.
மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் வரலக்ஷ்மி நமஸ்துப்யம் க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்.
வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.
பூவுலகில் சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.
இப்படி சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜித்தல் இதன் சிறப்பு . திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.
எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.
கொஞ்சம் சாஸ்திரோக்தமாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.
மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.
பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை.
குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. மாங்கல்யம்,நெற்றி, தலைவகிடு ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி வசிப்பதாக ஐதீகம் எனவே இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை வைப்பதன் மூலம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். மோதிர விரலில் குங்குமத்தைத் தொட்டு நெற்றியிலும் வகிட்டிலும் வைக்க வேண்டும். அன்னையின் அருள் இது போன்றே ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும் லட்சுமிக்கு உரிய நன்னாளாகும். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமியை மகாலட்சுமி பஞ்சமி என்று அழைப்பார்கள் இது ரிஷி பஞ்சமியாகவும் கொண்டாடப்படும். இதே போல கார்த்திகை மாதத்தில் வரும் பஞ்சமியை ஸ்ரீ பஞ்சமி என்றும் அழைக்கின்றனர். இந்த நாளிலும் மகாலட்சுமிக்கு விரதம் இருக்கலாம்.
வரம் தரும் வரலட்சுமி மகாலட்சுமிக்கு உரிய விரதங்களுள் மிகவும் முக்கியமான விரதம் வரலட்சுமி நோன்பு விரதமாகும். இந்த விரதம் நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீட்டினை சுத்தம் செய்து பூஜை அறையை அலங்கரித்து விரதம் இருந்து அம்மனுக்கு பிடித்த பாடல்களை பாடி அம்மனை வணங்க செல்வ வளமும் தீர்க்க சுமங்கலி வரமும் கிடைக்கும்.
கனகதாரா ஸ்தோத்திரம் அஷ்ட ஐஸ்வரியங்களையும் ஒருவன் பெற அந்தத் திருமகளின் அருட்கடாட்சம் இருக்க வேண்டும். அன்னை மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை ஒன்று மட்டுமே இதற்கு போதுமானது. ஆலய வழிபாடும் அப்பழுக்கில்லாத அழகிய உள்ளம் கொண்ட எவரும் திருமகளின் திருவருளை எளிதில் பெற்றுவிடலாம். நம்முடைய வீடுகளில் விளக்கேற்றி வைத்து தீபச் சுடரையே மகாலட்சுமியாகக் கருதி கனகதாரா ஸ்தோத்திரம் பாட அன்னையின் அருள் கிடைக்கும்.
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் எடுக்க பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்டதால் அவருக்கு அலை மகள் என்று பெயர் வந்தது. ஸ்ரீதேவியான மகாலட்சுமியை பாற்கடலில் வசிக்கும் மகா விஷ்ணு தனது நெஞ்சில் சூடிக்கொண்டார். அதனால்தான் அவரிடம் வற்றாத செல்வம் குறைவில்லாது இருக்கிறது. மகாலட்சுமியை முறையாக வழிபட்டு நம் வாழ்க்கையில் அனைத்து வகை செல்வங்களையும் பெறலாம்.
லக்ஷ்மீம் க்ஷீரஸ சமுத்ர ராஜ தநயாம் ஸ்ரீரங்க தாமேச்’வரீம் தாஸீ
பூத ஸமஸ்த தேவ வநிதாம் லோகைக தீபாங்குராம்|
ஸ்ரீ மந்மந்த கடாக்ஷலப்த விபவாம் ப்ரஹ்மேந்த்ர கங்காதராம்
த்வாம் த்ரைலோக்ய குடும்பிநீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்தப்ரியாம்||
"பத்ம ப்ரியே பத்மினி பத்ம ஹஸ்தே பத்மாலயே பத்ம தளாய தாக்ஷி
விஸ்வ ப்ரியே விஷ்ணு மநோநுகூலே த்வத் பாத பத்மம் மயி ஸந்நிதத்ஸ்வ
ஸ்ரியை ஜாத: ஸ்ரிய ஆநிர்யாய ஸ்ரியம் வயோ ஜநித்ருப்யோ ததாது
ஸ்ரியம் வஸாநாம் அம்ருதத்வம் ஆயந் பஜந்தி ஸத்ய: ஸ்மிதா மிதத்யூந்
ஸ்ரிய ஏவைநம் தத் ஸ்ரியா மாததாதி, ஸந்ததம் ருசாவஷட் க்ருத்யம்
ஸந்தத்தம் ஸந்தீயதே ப்ரஜயா பஸூபி: ய ஏவம் வேத"
[ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே விஷ்ணுபத்ந்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத்]
வரலக்ஷ்மி விரதத்தின் மகிமையை விளக்கும் புராணக் கதைகள் நிறைய இருந்தாலும், அதில் முக்கியமான சில கதையைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். பத்ரச்ரவா என்னும் சவுராட்டிர மன்னனின் மனைவி கசந்திரிகா. மன்னன் எப்பொழுதும் மங்கலச் சொற்களையே பேசுபவன், கேட்பவன்,தெய்வ பக்தி உடையவன். அவனுடைய மனைவி கசந்திரிகாவோ குணம், கல்வி, தர்மம், கற்பு ஆகிய நற்பண்புகள் கொண்ட அழகு பெண்.
சாதாரணமாக எல்லோராலும் எப்போதும் பெரும் முயற்சி கொண்டு தேடப்படும் செல்வத்திற்கு அதிபதி லக்ஷ்மிதேவி. லக்ஷ்மி தேவியின் திரு அவதாரம் துவாதசி வெள்ளிக்கிழமை. ஆகவே, அன்று லக்ஷ்மி தேவியைப் பூஜை செய்பவர் லக்ஷ்மியின் அருளை பரிபூர்ணமாகப் பெறுவர். இந்த வரலக்ஷ்மி விரதத்தைச் செய்து அடுத்தவர்களையும் வாழ வைத்த சியாம பாலாவின் சரிதம் இது.
பத்ரச்ரவா(பத்ரச்ரவஸ்) என்ற மன்னன் உத்தமமான விஷ்ணு பக்தன் கற்புக்கரசியான சுரசந்த்ரிகா அவன் மனைவி. இந்தத் தம்பதிகளின் மகள் சியாமபாலா. தம் செல்ல மகளை, சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.
சில காலம் சென்று ஒருநாள், செந்தாமரைச் செல்வியான லக்ஷ்மிதேவி, வயதான சுமங்கலி வேடத்தில் சுரசந்திரிகா அரண்மனைக்குள் நுழைந்தாள். மகளைப் புகுந்த வீடு அனுப்பிவிட்டுத் தனியாக இருந்த சுரசந்த்ரிகாவிடம், அன்போடு வரலக்ஷ்மி விரதத்தை விரிவாகக்கூறி அதைக் கடைப்பிடிக்கும்படி சொன்னாள். ஆனால், அரசியான சுரசந்த்ரிகாவோ வயதான சுமங்கலி வடிவில் வந்து உபதேசம் செய்த லக்ஷ்மிதேவியை, "யாரோ யாசகம் கேட்க வந்தவள்" என்று நினைத்து, கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்தி வெளியே விரட்டி விட்டாள். இப்படி அரசியால் விரட்டப்பட்ட லக்ஷ்மிதேவியை அரசியின் மகளான சியாமபாலா சமாதானப்படுத்தினாள். அத்துடன் லக்ஷ்மி தேவியிடம் இருந்து வரலக்ஷ்மி விரதத்தை விரிவாகக் கேட்டு உபதேசமும் பெற்றாள். பக்தியுடன் விரதத்தைக் கடைப்பிடித்தாள். விரத மகிமையால் சிறந்த செல்வம் பெற்றாள். இதே நேரம், இவள் பெற்றோர்களோ லக்ஷ்மிதேவியை அவமானப்படுத்தியதால் எல்லாவற்றையும் இழந்து ஏழைகளாக ஆனார்கள். விவரம் அறிந்த சியாமபாலா, ஒரு குடம் நிறைய தங்கத்தைத் தனது பெற்றோர்கள் வறுமை தீர அவர்களுக்கு அனுப்பினாள். அனுப்பிய தங்கம் பெற்றோர்களிடம் போனதும் (அவர்கள் தீவினையால்) அது கரியாக ஆகிவிட்டது. இதை அறிந்த சியாமபாலா தன் தாயான சுரசந்த்ரிகாவிடம் வரலக்ஷ்மி விரதத்தைப் பற்றிச் சொல்லிப் பூஜை செய்யும்படி கூறினாள். அவளும் மகள் சொன்னபடியே வரலக்ஷ்மி விரதத்தைக் கடைப்பிடித்து, பூஜை செய்து, அழிந்த செல்வங்களை எல்லாம் மீண்டும் பெற்று சுகவாழ்வு வாழ்ந்தாள். ஆகவே, பெண்மணிகள் எல்லோரும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு வாழ வேண்டுகிறோம்.
கதை:
முன்பொரு சமயம் தேவர்கள் வசிக்கும் கைலாஸ பர்வத சிகரத்தில் பரமசிவன் பார்வதியுடன் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தார். அச்சமயம் பார்வதி, "நாதா, நான் உங்களை ஜெயித்து விட்டேன்" என்றார். இப்படி இருவருக்கும் வாக்குவாதம் வந்தது.
அப்பொழுது அங்கிருந்த சித்திரநேமி என்ற கணதேவதையை இருவரும் மத்யஸ்த்தம் கேட்க, அவன் ஒரு சாராக, "பரமசிவன் தான் வெற்றி கொண்டார்" எனக்கூறினான். அதற்குப் பார்வதி அவன்மீது கோபம் கொண்டு "நீ பொய் சொன்னதால் குஷ்டரோகியாகி ஒளியிழந்து தவிப்பாயாக" என்று சபித்தாள்.
இதற்குப் பரமசிவன் வருந்தி, "தேவி, இந்த சித்திரநேமி எப்பொழுதும் பொய் என்பதே பேசாதவன். அவன் உண்மையைத்தான் கூறினான். நீ அவனை வீணாகச் சபித்து விட்டாயே! அவன் மீது நீ அருள் கூர்ந்து அவன் சாபத்தை அகற்றுவாயாக" என்று அவளை வேண்டினார்.
அதற்கு மனமிரங்கிய பார்வதிதேவி, "எப்பொழுது அழகிய தடாகதீரத்தில் தேவகன்னிகைகள் புண்ணியமான ஸ்ரீவரலக்ஷ்மீ விரதத்தை அனுஷ்டிப்பார்களோ, அப்பொழுது உன் சாபம் நீங்கும்" என்று கூறினாள். பிறகு சித்திரநேமி, சில தினங்களில் ஒரு தடாகக் கரையில் குஷ்டரோகியாக அங்கு வாசம் புரிந்து வந்தான். ஒரு நாள் அங்கே வந்த தேவப்பெண்களைக் கண்டான். தேவி பூஜையில் ஈடுபட்ட அந்தப் பதிவிரதைப் பெண்கள் தேவியை வணங்கி வழிபடுவதைக் கண்டு, "அம்மையீர், தாங்கள் செய்யும் பூஜை யாது? இதை நான் செய்யலாமா? நான் பார்வதியின் சாபத்தால் குஷ்டரோகியாகித் துன்புற்றிருக்கிறேன். என் துன்பம் நீங்கும் வழியைத் தாங்கள் கூறியருள வேண்டும்" என்று வேண்டினான்.
தேவப்பெண்கள் கூறியதாவது:
நாங்கள் இன்று ஸ்ரீவரலக்ஷ்மீ விரதம் அனுஷ்டிக்கிறோம். இது திவ்யமானது. வேண்டும் வரங்களை அளிக்கக்கூடியது. சூரியன் கடகத்தில் இருக்கும்போது, அதாவது கங்கையும், யமுனையும் சேரும் காலத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் சிராவண மாதத்தில் சுக்லபக்ஷத்தில் வெள்ளிக்கிழமையன்று முறைப்படி மஹாலக்ஷ்மியைப் பற்றியதான இந்த விரதத்தைத் தொடங்க வேண்டும். தேவகன்னிகைகள் செய்த இந்த பூஜையை சித்திரநேமி பார்த்ததால் அவனுடைய குஷ்டநோய் நீங்கித் தங்க நிறம் பெற்றான்.
நான் முயற்சியுடன் எல்லாவற்றையும் அளிக்கும் இந்த விரத்தை மேற்கொள்கிறேன் என்று கூறி, தானும் விரதத்தைச் செய்து, தேவர்கள் அனைவரையும் அனுஷ்டிக்கச் செய்தான்.
பிறகு பிராம்மணனுக்கும், ஸன்யாஸிக்கும், தெய்வத்திற்கும், பிரம்மச்சாரிக்கும், சுவாஸினிக்கும் முறையே ஐந்து வாயனதானங்களைச் செய்தான். அதன்பின், தேவிக்கு நமஸ்காரம் செய்து தன் இருப்பிடம் சென்றான்.
பிறகு, கைலாஸம் சென்று பார்வதீ பரமேஸ்வரர்களை வணங்கி அவர் அருகில் நின்று, "தேவி, வரலக்ஷ்மியின் அருளால் தங்கள் திருவடியைக்காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது" என்று கூறி வணங்கினான் அப்பொழுது பரமசிவன் "இன்று முதல் நீ இந்த கைலாஸத்தில் ஸகல போகங்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பாயாக. பிறகு இந்த விரதத்தின் மகிமையால் வைகுந்தலோகம் சேருவாய்" என ஆசி வழங்கினார். முன்பு பார்வதியும் ஸத்புத்திர லாபத்திற்காக இந்த விரதத்தை அனுஷ்டித்தாள். அதன் மகிமையால் இவளுக்கு ஷண்முகன் தோன்றினான். இந்த விரதத்தை படித்தால் சகல சௌபாக்கியங்களையும் அடைவர்.
மேலும் சவுராஷ்டிர தேசத்தில் குண்டினம் என்ற நகரத்தில் சாருமதி என்ற பெண் இந்த வரலக்ஷ்மீ விரதத்தை உபதேசிக்கப்பெற்று, சிராவண மாதம் சுக்லபக்ஷ பௌர்ணமியுடன் கூடிய வெள்ளிக்கிழமையன்று தேவியை வரித்து சகல பாக்யங்களையும் பெற்றாள்.
அதிலிருந்து பூலோகத்தில் இப்பூஜை பரவியது. இந்த வரலக்ஷ்மீ விரதமகிமையைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் வரலக்ஷ்மியின் அருளால் தனதான்ய ஸம்பத்துக்கள் உண்டாகும். வரலக்ஷ்மி விரத பூஜையை நாம் சிரத்தையுடன் செய்தால், லஷ்மி தேவி மனம் மகிழ்ந்து எல்லா நலன்களையும் அருளுவாள்.
வியாழக்கிழமை அன்று இரவே வீட்டையும், பூஜை செய்யும் இடத்தையும் தூய்மை செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து, வாசலில் பச்சரிசி மாவினால் கோலம் போட வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும். பூஜையறையில் ஒரு தலைவாழை இலையில் ஒரு கலசம் (பித்தளை அல்லது வெள்ளிச் சொம்பு) வைத்து அதில் பச்சரிசி அல்லது சுத்தமான தண்ணீரால் நிரப்ப வேண்டும். தண்ணீர் நிரப்பினால், அதனுடன் சிறிது மஞ்சள் பொடி, ஒரு எலுமிச்சைப் பழம் மற்றும் கருகமணிகள் சிறிது சேர்க்க வேண்டும். கலசத்தை நிரப்பிய பிறகு கலசத்தின் மேல் மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் தடவிய கயிறுகளை கலசத்துக்கு முன்பாக பழம், தேங்காய், தாம்பூலம் வைக்கப்பட்டிருக்கும் தாம்பாளத்தில் வைக்கவேண்டும். பிறகு கலசத்தில் மாவிலை செருகி, அதன் நடுவில் மஞ்சள் பூசிய தேங்காயை வைக்க வேண்டும். அதன் மேல் அம்மன் முகத்தை வைத்து (தற்போது பூஜைப் பொருள்கள் விற்கும் கடைகளில் கிடைக்கிறது) அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு பாவாடை போன்ற வஸ்திரத்தைச் சாத்தி, நம் விருப்பப்படி மலர்களாலும், நகைகளாலும் அலங்கரிக்க வேண்டும். கலசத்துக்கு முன்பாக மஞ்சளினால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.
நல்ல நேரமாகப் பார்த்து தூய பக்தியுடன், "சுக்லாம் பரதரம்" என்ற ஸ்லோகம் சொல்லி விநாயகரை பூஜிக்க வேண்டும். விநாயகர் பூஜை முடிந்ததும் கலசத்தில் வரலட்சுமியை ஆவாஹணம் செய்து, விஷ்ணு சகஸ்ரநாமம், லக்ஷ்மி சகஸ்ரநாமம் போன்ற பக்தி ஸ்லோகங்களைப் பாராயணம் செய்ய வேண்டும். நிறைவாகப் பழங்கள் மற்றும் இனிப்புகளைக் கொண்டு நைவேத்தியம் செய்து மங்கல ஆரத்தி எடுக்க வேண்டும். பூஜை முடிந்ததும் மஞ்சள் கயிற்றை எடுத்துக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். அன்றைக்கு மாலை சில சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்துத் தாம்பூலம் தர வேண்டும்.
"ததாதி பிரதி க்ருஹ்ணாதி" என்பார்கள். அதாவது, நாம் எதைக் கொடுக்கிறோமோ, அதுவே நமக்குக் கிடைக்கும். கனிவும் கருணையும் கொண்டவள் ஸ்ரீமகாலட்சுமி. அவளை மகிழ்வித்தால், அவள் நம்மையும் நம் குடும்பத்தையும் மகிழச் செய்வாள். கன்னிப்பெண்கள் விரதமிருந்தால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானமும், ஆரோக்கியமும் கிடைக்கும். மாமியார் - மருமகள் உறவு மேம்படும். விரும்பிய நலன்கள் எல்லாம் கிடைக்கும். வீட்டில் செல்வம் நிறையும் என்பது ஐதீகம்.
சக்தியின் வடிவமாகப் போற்றப்படும் பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொண்டு மகாலட்சுமியைப் பூஜித்து வழிபட்டால் இல்லத்தில் மகாலட்சுமியின் கடாட்சம் பெருகும். வரங்கள் அனைத்தையும் அருளும் ஸ்ரீ மகாலட்சுமியை நம் இல்லத்துக்கு வரவேற்றுப் போற்றி வழிபடுவோம்... அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெற்று இன்பமாகவும், வளமாகவும் வாழ்வோம்..
வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.
(சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.)
பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.
விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் & ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.
பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். பஞ்சாங்கம் பார்த்து, நாள், திதி, வருடம், பட்சம், மாதம் ஆகியவற்றை அறிந்து குறித்துக் கொள்ளவும்.
மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.
இப்பூஜையானது எல்லா பிரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.
(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)
தீபஜோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ மே ஹரது பாபம்
தீபஜ்யோதிர் நமோஸ்து தே
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)
ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:
ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.
அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)
(1) கேசவா வலக்கைக் கட்டைவிரல் வலக்கன்னம்
(2) நாராயண வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
(3) மாதவ வலக்கை மோதிர விரல், வலக்கண்
(4) கோவிந்த வலக்கை மோதிரவிரல், இடக்கண்
(5) விஷ்ணு வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
(6) மதுஸூதன வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
(7) த்ரிவிக்ரம வலக்கை சிறுவிரல், வலது காது
(
வாமன வலக்கை சிறுவிரல், இடது காது
(9) ஸ்ரீதர வலக்கை நடுவிரல், வலதுதோள்
(10) ஹ்ருஷீகேச வலக்கை நடுவிரல், இடதுதோள்
(11) பத்மநாப நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
(12) தாமோதர ஐந்து விரல்களும் சேர்த்து, தலை.
வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக்கொண்டு கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.
சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ ந்தயே
(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)
ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(வலது காதை தொடவும்.)
வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடது கை மேல் வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு அக்ஷதையை வடக்கே போடவும்.
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’ வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்ய
கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்
ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யே
குறிப்பு:
மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பிரார்த்தனை
(மஞ்சள் பிள்ளையாருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அக்ஷதையை போடவும்.) வேத மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்பவர்கள் மட்டுமே கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லவும்.
கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்
அஸ்மின் ஹரித்ராபிம்பே
விக்னேச்’ வரம் த்யாயாமி,
விக்னேச்’வரம் ஆவாஹயாமி
உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு, ஓம் அச்சுதாய நம: / ஓம் அனந்தாய நம: / ஓம் கோவிந்தாய நம: என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். இது ஆசமனம்.
கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்|
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே||
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ
விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||
என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். மணி அடிக்கவும். பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும்.
அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி / ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி & என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும்.
இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும்.
அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே
அஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’வரம்
த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி
(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.)
விக்னேச்’வராய நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி
(மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)
விக்னேச்’ வராய நம:
பாத்யம் ஸமர்ப்பயாமி
(கீழ்கண்ட மந்திரம் சொல்லி உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)
விக்னேச்’வராய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.)
விக்னேச் ’வராய நம:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(மஞ்சள் பிள்ளையார் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்)
விக்னேச் ’ வராய நம:
ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்)
விக்னேச் ’வராய நம: ஸ்நாநாநந்தரம்
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)
விக்னேச்’ வராய நம:
வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி
(மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)
விக்னேச் ’ வராய நம: யக்ஞோப
வீதார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி
(மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்)
விக்னேச் ’ வராய நம: கந்தாம்
ஸமர்ப்பயாமி
(மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.)
விக்னேச் ’வராய நம: கந்தோபரி
குங்குமம் ஸமர்ப்பயாமி
(மஞ்சள் பிள்ளையாருக்கு அக்ஷதையை சமர்ப்பிக்கவும்.)
விக்னேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(மஞ்சள் பிள்ளையாருக்கு உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்.)
விக்னேச்’ வராய நம:
புஷ்பை: பூஜயாமி
(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|
பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)
ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்)
அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்)
புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்)
புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும்.
ஓம் சுமுகாய நம: |
ஓம் ஏகதந்தாய நம: |
ஓம் கபிலாய நம: |
ஓம் கஜகர்ணாய நம: |
ஓம் லம்போதராய நம: |
ஓம் விகடாய நம: |
ஓம் விக்னராஜாய நம: |
ஓம் விநாயகாய நம: |
ஓம் தூமகேதவே நம: |
ஓம் கணாத்யக்ஷாய நம: |
ஓம் பாலசந்த்ராய நம: |
ஓம் கஜானனாய நம: |
ஓம் வக்ரதுண்டாய நம: |
ஓம் சூர்ப்பகர்ணாய நம: |
ஓம் ஹேரம்பாய நம: |
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |
ஓம் ஸித்திவிநாயகாய நம: |
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:
அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.
அம்ருதோபஸ்தரணமஸி |
ஓம் ப்ராணாய ஸ்வாஹா |
ஓம் அபாநாய ஸ்வாஹா |
ஓம் வ்யாநாய ஸ்வாஹா |
ஓம் உதாநாய ஸ்வாஹா |
ஓம் ஸமாநாய ஸ்வாஹா |
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா |
மஹாகணபதயே நம:
அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி |
அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்...
பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.
வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா||
என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும்.
சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோர்& தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதி& ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, ( )நாம ஸம்வத்ஸரே, ( )அயனே, ( )ருதௌ, ( )மாஸே, ( )பக்ஷே, ()சுபதிதௌ, ( )வாஸரயுக்தாயாம், ( )நக்ஷத்ர யுக்தாயாம், சுபயோக சுபகரண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சுப திதௌ,
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம் ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ரஸாத ஸித்த்யர்த்தம், யாவச்சக்தி த்யான&ஆவாஹனாதி ஷோடச உபசாரை: ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே| &
- என்று சங்கல்பித்து, அட்சதையை வடக்குப் புறம் சேர்க்கவும். உத்தரணி தீர்த்தத்தால் கையை துடைத்துக் கொண்டு, கையில் புஷ்பத்தை எடுத்துக்கொண்டு,
ஸ்ரீ விக்னேஸ்வரம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி |
சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ||
என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது சேர்த்து, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் புறம் நகர்த்தி வைக்கவும்.
பின் கலச பூஜை செய்யவும். பஞ்சபாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு,
கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ
ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு||
என்று, புஷ்பார்ச்சனை செய்யவும்.
கங்காயை நம:|
யமுனாயை நம:|
கோதாவர்யை நம:|
ஸரஸ்வத்யை நம:|
நர்மதாயை நம:|
ஸிந்தவே நம:|
காவேர்யை நம:|
தாம்ரவர்ண்யை நம:
என்று பூஜித்து, தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:|
குருஸ்ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:||
- என்று, குருவை தியானித்த பிறகு, ப்ராணப்ரதிஷ்டை செய்யவும்.
அஸ்ய ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ரம்ம-விஷ்ணு -மஹேச்வரா ருஷய: (வலது கையை தலை உச்சியில் வைக்கவும்)
ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்)
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா (ஹ்ருதயத்தில் தொடவும்)
ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம்||
பிறகு, அங்கந்யாச கரந்யாசங்கள் செய்து தியானித்து, புஷ்பம் அட்சதையை தீர்த்தத்துடன் பின்வரும் மந்திரம் சொல்லி, கும்பத்திலுள்ள லக்ஷ்மி பிம்பத்தில் சேர்க்கவும்.
ஆவாஹிதோ பவ|
ஸ்தாபிதோ பவ|
ஸந்நிஹிதோ பவ|
ஸந்நிருத்தோ பவ|
அவகுண்டிதோ பவ|
ஸுப்ரீதோ பவ|
ஸுப்ரஸன்னோ பவ|
ஸுமுகோ பவ|
வரதோ பவ|
ப்ரஸீத ப்ரஸீத|
தேவி ஸர்வ ஜகன்நாயிகே யாவத் பூஜாவஸானகம்|
தாவத் த்வம் ப்ரீதி- பாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு||
- இப்படி ப்ராணப்ரதிஷ்டை செய்து, புஷ்பம் அட்சதை, தீர்த்தம் விட்டு, பால் பழம் நிவேதித்து, வரலக்ஷ்மி பூஜையைத் தொடங்கவும்.
கும்பத்தில் வரலக்ஷ்மியை தியானிக்கவும்.
பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம்|
க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்|
க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்|
பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே|
வரலக்ஷ்ம்யை நம:|
என்று சொல்லி புஷ்பத்தை சேர்க்க வேண்டும்.
பாலபானு பரதீகாசே பூர்ண சந்த்ர நிபானனே ஸூத்ரேஸ்மின் ஸுஸ்திதா பூத்வா ப்ரயச்ச பஹுலான் வரான்||
என்று, 9 முடிச்சுகள் போட்ட சரடில் பூ முடித்து, கும்பத்தில் சாற்ற வேண்டும்.
ஸர்வ மங்கல மாங்கல்யே விஷ்ணு வக்ஷ: ஸ்தலாலயே|
ஆவாஹயாமி தேவித்வாம் அபீஷ்ட பலதா பவ||
வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி|
- என்று சொல்லி புஷ்பத்தை கும்பத்தில் சேர்த்து ஆவாஹனம் செய்யவும்.
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பாத்யம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அர்க்யம் ஸமர்ப்பயாமி (புஷ்பத்துடன் தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி (தேன் கலந்த தயிர் நிவேதனம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி (பஞ்சமிர்த நிவேதனம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஸ்நானம் ஸமர்ப்பயாமி (தீர்த்த ப்ரோக்ஷணம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி (வஸ்திரம் அல்லது அட்சதை)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கண்டஸூத்ரம் ஸமர்ப்பயாமி (கருகமணி/பனைஓலை அணிவிக்க)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆபரணானி ஸமர்ப்பயாமி (ஆபரணங்கள் அணிவிக்கவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கந்தம் ஸமர்ப்பயாமி (சந்தனம் இடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அக்ஷதான் ஸமர்ப்பயாமி ( அட்சதை சேர்க்கவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி (புஷ்பம், மாலை சேர்க்கவும்)
பிறகு அங்க பூஜை செய்யவும்.
முழுதாகச் செய்யாவிடினும், மகாலட்சுமி பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக பாவனை செய்து, ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று சொல்லி புஷ்பம் அட்சதை ஸமர்ப்பிக்கவும்.
பின், நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோ த்ரசத நாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்.
ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளி
(ஒவ்வொரு நாமாவளிக்கு முன்னும் ஓம் என்றும், பின்னர் நம: என்றும் சேர்த்துச் சொல்லவும்)
ஓம் ப்ரக்ருத்யை நம:
விக்ருத்யை
வித்யாயை
ஸர்வபூத ஹிதப்ரதாயை
ச்ரத்தாயை
விபூத்யை
ஸுரப்யை
பரமாத்யை
வாசே
பத்மாலயாயை
பத்மாயை
சுசயே
ஸ்வாஹாயை
ஸ்வதாயை
ஸுதாயை
தன்யாயை
ஹிரண்ம்யை
லக்ஷ்ம்யை
நித்யபுஷ்டாயை
விபாவர்யை
அதித்யை
தித்யை
தீப்தாயை
வஸுதாயை
வஸுதாரிண்யை
கமலாயை
காந்தாயை
காமாக்ஷ்யை
க்ரோதஸம்பவாயை
அனுக்ரஹப்ரதாயை
புத்தயே
அநகாயை
ஹரிவல்லபாயை
அசோகாயை
அம்ருதாயை
தீப்தாயை
லோகசோக விநாசின்யை
தர்மநிலயாயை
கருணாயை
லோகமாத்ரே
பத்மப்ரியாயை
பத்மஹஸ்தாயை
பத்மாக்ஷ்யை
பத்மஸுந்தர்யை
பத்மோத்பவாயை
பத்மமுக்யை
பத்மநாபப்ரியாயை
ரமாயை
பத்மமாலாதராயை
தேவ்யை
பத்மகந்தின்யை
புண்யகந்தாயை
ஸுப்ரஸன்னாயை
ப்ரஸாதாபிமுக்யை
ப்ரபாயை
சந்த்ரவதனாயை
சந்த்ராயை
சந்த்ரஸஹோதர்யை
சதுர்ப்புஜாயை
சந்த்ரரூபாயை
இந்திராயை
இந்துசீதளாயை
ஆஹ்லாத ஜனன்யை
புஷ்ட்யை
சிவாயை
சிவகர்யை
ஸத்யை
விமலாயை
விச்வஜனன்யை
துஷ்ட்யை
தாரிர்ய நாசின்யை
ப்ரீதிபுஷ்கரிண்யை
சாந்தாயை
சுக்லமால்யாம்பராயை
ச்ரியை
பாஸ்கர்யை
பில்வநிலயாயை
வராரோஹாயை
யசஸ்வின்யை
வஸுந்தராயை
உதாராங்காயை
ஹரிண்யை
ஹேமமாலின்யை
தனதான்யகர்யை
ஸித்தயே
ஸ்ரைண ஸெளம்யாயை
சுபப்ரதாயை
ந்ருபவேச்ம கதானந்தாயை
வரலக்ஷ்ம்யை
வஸுப்ரதாயை
சுபாயை
ஹிரண்யப்ராகாராயை
ஸமுத்ரதனயாயை
ஜயாயை
மங்களாதேவ்யை
விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை
விஷ்ணுபத்ன்யை
ப்ரஸன்னாக்ஷ்யை
நாராயண ஸமாச்ரிதாயை
தாரிர்ய த்வம்ஸின்யை
தேவ்யை
ஸர்வோபத்ரவ வாரிண்யை
நவதுர்காயை
மஹாகாள்யை
ப்ரஹ்மவிஷ்ணு சிவாத்மிகாயை
ஸம்பன்னாயை
புவனேஸ்வர்யை
(108 அஷ்டோத்திர சத நாமாவளி முற்றும்)
🌟 பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்?
மகாலட்சுமி, பாற்கடலில் அவதரித்தவள். மகாவிஷ்ணுவை மணந்தாள். விஷ்ணு பூமியில் அவதாரம் செய்த நாட்களில் சீதாவாகவும், பத்மாவதியாகவும், துளசியாகவும், ஆண்டாளாகவும். இன்னும் பல வடிவங்கள் எடுத்து வந்தவள். பூலோகத்திலும், அவள் அவரைக் கைப்பிடித்தாள். செல்வத்தின் அம்சமாக இருந்து, நம் பாவ, புண்ணியத்திற்கேற்பவும், விதிப்பலனுக்கேற்பவும் செல்வத்தை வழங்கும் அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமே வரலட்சுமி விரதம் ஆகும். நித்தியசுமங்கலியான மகாலட்சுமி பொறுமையே வடிவானவள். கணவரின் இதயத்தில் குடியிருக்கும் இவள், பெண்களை துன்பங்களில் இருந்து காப்பவளாக திகழ்கிறாள். மஞ்சள் நிற பட்டு அணிந்திருக்கும் இவள் கருணை, அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியாவாள். அதர்வண வேதத்தில் லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று கூறப்பட்டுள்ளது. பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். இதனால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். திருமணதோஷம் உள்ள கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். செல்வம், தான்யம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள், லட்சுமியை பூஜிக்கும் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிப்பது நல்லது. இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பர்.
வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் சிறு மண்டபம் அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்விடத்தில் ஒரு பலகையை வைத்து அதில் சந்தனத்தில் செய்த லட்சுமியின் வடிவத்தை வைக்கவேண்டும். வெள்ளி சிலைகளும் வைக்கலாம். சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவித்து, தாழம்பூவால் அலங்காரம் செய்து, எதிரில் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். புனித நீர் நிரம்பிய கும்பத்தை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள், தங்கநகை ஆகியவற்றையும் இலையில் படைக்க வேண்டும். கொழுக்கட்டை நைவேத்யம் செய்ய வேண்டும். பின்பு பூஜை செய்ய வேண்டும்.
அப்போது, அஷ்டலட்சுமிகளுக்கு விருப்பமான அருகம்புல்லை சிலை மீது தூவி பூஜிப்பது நல்லது. ஏழை சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறை வலது கையில் கட்டி, தேங்காய், குங்குமம், புதிய ஆடைகள் கொடுக்க வேண்டும். பூஜைக்கு பிறகு, கும்பத்திலுள்ள புனிதநீரை செடி அல்லது மரங்களுக்கு ஊற்றிவிட்டு, கும்பத்தை ஒரு பெட்டியில் வைத்து பத்திரப் படுத்த வேண்டும். அதை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். வேறு பூஜைகளுக்கு இதைப் பயன்படுத்தும் போது மட்டுமே எடுக்க வேண்டும். சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. அது நெளிந்து விட்டாலோ, பிற பழுது ஏற்பட்டாலோ யாருக்காவது தானமாகக் கொடுத்து விட வேண்டும். சந்தனத்தில் செய்த லட்சுமியின் உருவத்தை மறுநாள் நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும். தேவலோகத்தில் சித்திரநேமி என்ற பெண் வசித்து வந்தாள். இவள், தேவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நீதிபதியாக இருந்தவள். ஒருசமயம் அவள் தீர்ப்பு சொல்லும்போது, பாரபட்சமாக நடந்து கொண்டாள். நீதி வழங்குபவர்கள் எந்த சூழ்நிலையிலும் நடுநிலை தவறக்கூடாது. ஆனால், சித்திரநேமி தன் பணியில் இருந்து தவறி விட்டாள். எனவே, பார்வதிதேவி அவளுக்கு குஷ்டநோய் ஏற்படும்படி சபித்து விட்டாள். சித்திரநேமி சாப விமோசனம் கேட்டாள்.
வரலட்சுமி விரதம் இருந்து தன்னை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்றாள். அதன்படி சித்தரநேமி, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கி, நோய் நீங்கப்பெற்றாள். பணியிலோ, குடும்ப விவகாரத்திலோ நடுநிலை தவறி, அதனால் மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு வரலட்சுமி விரதம் அனுஷ்டிப்பது மனபாரத்தை குறைக்கும் மருந்தாக இருக்கும். வரலட்சுமி விரதத்தன்று, புண்ணய நதிகளில் நீராடுவது, ஒரு வருடம் தொடர்ந்து வரலட்சுமி விரதம் இருப்பதற்கு ஒப்பான பலன்களைத் தரும். கங்கை, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய நதிகளில் அன்று நீராடினால் செல்வச்செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. புகுந்த வீட்டு உறவினர்களை மதித்து நடக்கும் பெண்கள், வரலட்சுமி விரதம் இருந்த பலன்களை பெறுவதாக ஐதீகம். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண்ணை அவளது பெற்றோர் மண முடித்துக் கொடுத்தனர். புகுந்த வீட்டில் கணவன், மாமனார், மாமியார், உறவினர்கள் என அனைவரையும், அவள் சொந்தமாக பார்க்காமல், கடவுளின் வடிவமாகவே பாவித்து, பணிவிடை செய்தாள். இதனால், அவள் வரலட்சுமி விரதம் இருந்த பலனை பெற்றாள். தன் கணவனுடன் நீண்ட காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள்.
வரலக்ஷ்மி அம்மன் பூஜையின் விபரம்
தாமரச் சொம்பிலோ, அல்லது வெள்ளிச் சொம்பிலோ சுண்ணாம்பு பூசி, ஸ்ரீ தேவியின் முகத்தை செங்காவியினால் எழுதி கலசத்திற்குள் சோபனத்திரவ்யம் (அரிசி, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், எலுமிச்சை, ஸ்வர்னம்) போட்டு:
ஓலை, கருகமணி போட்டு; கண்ணாடி, சீப்பு, வைத்து கலசத்தில் மாவிலை தேங்காய் வைத்து, ஆபரணம் பூமாலை இவைகளால் அலங்கரிக்க வேண்டும். ரேழியில் மாவு கோலம் போட்டு அங்கே தீபம் ஏற்றிவைத்து பலகை மீது கலசத்தை வைத்து தீபாராதனை செய்து மங்களம் பாடி ஹாரத்தி எடுத்து இருசுமங்கலிகள் கைபிடித்து லக்ஷ்மி! ராவேமாயிண்டிகு என்று பாடி உள்ளே கொண்டு போய் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தின் நடுவில் வைத்து நுனி இலையில் அரிசியைப் பரப்பி அதன் நடுவில் கலசத்தை வைத்து பூஜை ஆரம்பிக்க வேண்டும்.
வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள்போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியைத் தந்தது. மகாலட்சுமி, சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள் புரிந்தாள்.என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பேன் என்று அப்போது சாருமதிக்கு அருளிய வரலட்சுமி, அந்த விரத முறையை கூறி மற்றவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டாள். அதை அப்படியே செய்தாள் சாருமதி. இப்படித்தான் வரலட்சுமி விரதம் பிறந்தது.
சுவற்றில் சுண்ணாம்பு அடித்து மண்டபம் போல் எழுதி நடுவில் தேவி உருவத்தையும் எழுத வேண்டும். மாலை வேளையே லக்ஷ்மி பூஜைக்கேற்ற காலமாகும். காலத்திற்கேற்றபடி சிலர் காலையிலேயே அனுஷ்டிக்கிறார்கள். ஸ்ரீ குருவை நமஸ்கரித்து ஆசி பெற்று சந்தோஷமான மனதுடன் அம்மனைக் கொண்டாடி பூசித்து நிவேதனம் செய்து மங்களங்கள் பாடினால் லக்ஷ்மி நாராயணனுமாக நம் இல்லத்தில் வாஸம் செய்து சர்வமங்களங்களையும் அளிக்க வல்ல ஸ்ரீ ருக்மணி காந்தனுடைய அருள் ஏற்படும் என்பது திண்ணம்.
ஓம் ஸ்ரீ மகாகணபதயே நம:
ஓம் ஸ்ரீ ஸத் குருப்யோ நம:
ஓம் ஸ்ரீ பாலா திருபுர ஸூந்தர்யை நம:
லக்ஷ்மி ராவே மா இண்டிகி
ஸ்ரீ ராஜபுத்ரி வரலக்ஷ்மி ராவேமா இண்டிகி
அனுபல்லவி
லக்ஷ்மி ராவே மா இண்டிகி லாலிதமுகநேலாகொந்த
சுப்ரஸன்ன சுந்தரி பிருந்தாவன
தேவதாரி - லக்ஷ்மி ராவே மா இண்டிகி
சரணம்
குங்கம பச்ச கஸ்தூரி கோர்க்ய தோன
கோர ஜவ்வாஜூ அங்கித முகனே
சுல கந்தம் சந்தமுக சாம்பிராணி தூபம்
மாதாநீகு ப்ரீ திகா பிரக்யா திகா
சமாபிந்து நம்மா
குண்டுமல்ய லமரகானு தண்டிக சாமந்தியா
பூலு மேலைன பாரிஜாதமு மாதாமீகு
ப்ரீதிகா ப்ரக்யாதிகா சமர்ப்பிந்து நம்மா
அந்தனமனா அன்னி பண்டுலு கதலீ
நிம்மாதிபலமுலு ஸததமு கல்ஜூரபலமு
மேலைன தாளிம்பலமு பண்டு வெந்நலா
ஸெள பத்மாக்ஷி நின்னே பூஜந்து - லக்ஷ்மி
பூஜா சேதா முராரே மன கௌரிகி
பூஜா சேதா முராரே த்ரேஜா முகா நேடு
ராஜீவாக்ஷிலு மேமு ஜாஜி பூலா (பூஜா சேஸ்தா முராரே)
பங்காரு தட்டலதோ பொங்குக புஷ்பமுலு
மங்கள வாத்யமுதோ மனகௌரிகு
பூஜா சேஸ்தாமுராரே - கெந்த குங்கும ஆனந்த மூகானு தெச்சி
இந்துவதனலார இந்திரக்ஷிகி (பூஜா சேஸ்தா முராரே)
குண்டு முல்யாபூலு நிண்டு முகிலுபூலு தண்டீக
கட்டி ஜடநிண்டா சுட்டி
பங்கஜபாணிகி பரம கல்யாணிகி சங்கரி
ராணிகி சிவ வேணிகி (பூஜா சேஸ்தா முராரே)
கௌரீ கல்யாணமே - வைபோகமே
ரம்மி முத்துலகம்மா ரம்மி மாயம்மா ராவம்மா
ஜானகி ரமணீய ரத்னம்மா
சில கல குலுகிரோ சிருங்கார கௌரீ
தலகனி நிரு பூலத் ரோய ஜகந்தி
வேகரா மஹாலக்ஷ்மிவேக ராவம்மா
வேண்டி கொடுகு நீட வேகரா ராவம்மா
பக்திதோ கொலிசன பண தூலபால வெளிசி
னாவு நித்ய கல்யாண முகனு
ஜகதீச்வரி நின்ன அடிகின வரமுலு
இச்சே தல்லி வரலக்ஷ்மிக்கு வஜ்ரால
ஹாரதிலு எத்திதரே சாலபூவுலு
சுட்டி சர்வாபரணமுலு தொடிகி சந்தோஷ
முகநீவு ஒச்சே தல்லி
வஜ்ராலபிடமுல வெலகு சுன்ன தல்லி
கலிகே இண்டிகி ஒச்சே லக்ஷ்மி ஜய மங்களம்
பூஷணா நினு கொலுது புஷ்பானுநினு கொலுது
கெந்தானினு கொலுது சந்தானலு எப்புடு
நின்னு கொலுசி ஏகசித்த மமேனனு பாயக நீன
கொலுது பரமேச்வரி
சங்கரீ ஜகதம்ப ஜகந் நித்யகல்யாணி
பங்கஜ தள நேத்ரீ பாவன பாஹிமாம்
கான்தோசிரோன்மணி கமலதள நேத்ரீ
மந்தர புஷ்பம் பெட்டி மங்களலக்ஷ்மிகி
1. வரலெக்ஷ்மி அம்மனுட மகிமையுள்ள கீர்த்தனங்கள்
மங்களமாகவே மகிழ்ந்து பாட
ச்ருங்கார கணபதியெ ஜெயமாக வந்தெனக்கு
தங்காமல் சரஸ்வதி சகாயம் வேணும் (ஜெய)
2. கைலாஸந்தனிலே காட்சியுடனே இருக்கும்
கருணாகடாக்ஷரென்னும் பரமேச்வரர்
அவருடைய பாதத்தில் ஆனந்தமாகவே
அன்புடனே பார்வதியும் அடிபணிந்தாள் (ஜெய)
3. சொல்பொரியே ஈசுவரியே சுபகீர்த்தியுள்ளவளே
கலியிலே கல்பிச்ச விர தங்கள் தன்னில்
எந்த விருதம் அதிசயம் ஏதென நியமிச்சு
எந்தனுக்கு சொல்லுவாய் இஷ்டமாக (ஜெய)
4. உமையாளே கேளு நீ. ஒரு கதை சொல்லுகிறேன்
தரணியிலே அனேக விரதங்களுண்டு
ஆனாலும் வரலக்ஷ்மி அம்மன் விரதம் அதிசயம்
அனைவரும் ஆதரித்துக் கொள்ளவேணும் (ஜெய)
5. குண்டிலம் என்றொரு மண்டிலப் பட்டணத்தில்
சாருமதி என்ற மங்கை இருக்க
சாருமதி மங்கையை சகலரும் கொண்டாடும்
சந்தோஷ விப்ரருடைய பத்னியாளாம் (ஜெய)
6. அவளுடைய மகிமை யார்தான் அறியதொரு
அருந்ததி குணசாலி அம்மன் அவளே
மாமியார் மாமனார் மாதா பிதாக்களை
குரு பூஜை பண்ணுவாள் கோபமில்லாமலே (ஜெய)
7. பர்த்தாவின் பூஜையில் பழுதொன்றும் வாராது
பாக்யவதி சொர்ப்பனத்தில் வந்து சொன்னாள்
சிராவணமாஸத்தில் பௌர்ணமிக்குள்ளாக
சுக்ரவாரந்தனிலே சுகிர்தத்துடனே (ஜெய)
8. என்னை நீபூஜித்து இஷ்டவரம் நான் தந்து
கஷ்டமெல்லாம் போக்கி கனவிலே
சொல்லவே வரலக்ஷ்மி சோகமெல்லாம் குளிர்ந்து
மெல்லியர் கண்முன் மறைந்து கொண்டாள் (ஜெய)
9. நல்வாக்கிய மிதுவென்று நாடெல்லாம் அறியவே
சொன்னாளே சாருமதி சுபகதைகளை சகலரும்
கொண்டாடி சந்தோஷப்பட்டு உகந்து
கண்டாளே கருணா கடாட்சி யம்மனை (ஜெய)
10. உண்டு பண்ணாமலே மேதினியில் உள்ளவர்கள்
கொண்டாடி பூஜிக்கவேணும் எனறு
நதியில் ஸ்னானம் பண்ணி நெற்றி குங்குமமிட்டு
பக்தியுடன் ஸூப்ர வஸ்திரம் தரித்தாள் (ஜயசுப)
11. நித்யமா வரலெக்ஷிமி முக்தி தரும் நாயகி சித்தத்திலே மறைஞ்சுசெல்வமாக்கும் சித்திரம் எழுதியே சிறப்பாக கிரகந்தனில்முத்திடித்து கோலம்போட்டு முஹூர்த்தம் பார்த்து
12. பத்துவித மாலையும் கட்டுடனே புஷ்பமும் (கட்டின பூப்பந்தல்)கல்யாணிக்கு ரத்னகோலம் எழுதி பஞ்சவர்ண பொடி போட்டு
13. ரத்ன விளக்கேற்றி இருபு றமும் வைத்தாள் (ஜய)
நித்யமாமங்கையர்கள் பூஜிக்கவேணுமின்னு
பக்தியுடன் தேவியை வாருமின்னு அச்சுதன்
தேவியர்க்கு அலங்கரித்து வீதியெல்லாம்
பைங்கிளிமார் எதிர்கொண்டு பார்த்து நின்றார் (ஜய)
14. புண்டரீ காக்ஷருடைய பூர்ணநாயகிம்மன்
தண்டின் மேலேறி ஸகலரும் சூழவே
மண்டலம் அதிரவே மணிமேளம் முழங்கவே
கொண்டாடி திருவீதி தன்னில் வந்தாள் (ஜய)
15. வரலெக்ஷ்மி வருகிறாள் என்று சொல்லி மங்கையர்கள்மாணிக்க சிம்மாஸனங்கள் போட்டு கற்பூரஹாரத்திகாக்ஷியுடனே எடுத்து கைபிடித்து கிரகந்தனிலே அழைத்து வந்தார்
16. திருமஞ்சனமாடி தேன் மொழியாளுக்கு
பச்சை பசேலென்ற மஞ்சளைப் பார்த்துப்பூசி
பட்டாலே ஸரஸ்வதியை பார்த்து தலைமயிரொதரி
கட்டினாள் ஒரு முடிச்சு கல்யாணிக்கு
17. பீதாம்பரம் உடுத்தி பெருமை யுள்ளலக்ஷ்மிக்கு
ஆதார மாலையிட்டு அம்மன் அவளே
ஸாதூத மங்கையர்கள் சந்நிதியில் ஸ்தோத்தரித்து
போதுடனெ எழுந்திருக்க வேணுமின்னாள் (ஜய)
18. பத்துவித மாலையும் கஸ்தூரி திலகத்தை காக்ஷியுடனே
இட்டு சித்தாக குங்குமம் சிறப்பாக இட்டு
விஸ்தாரமான கண்களுக்கு மை எழுதி
பக்தியுடன் சந்தனங்கள் தரித்தார் (ஜய)
19. சுட்டியோடு பட்டமும் சூரியசந்திர பிரபைகளும்
சட்டமான மூக்குத்தி சரப்பள்ளியுடன்
பொட்டு திருமங்கலியம் புது பவழமாலைகளும்
மட்டில்லா பூ ஷணங்கள் எடுத்து நிறைத்தாள் (ஜய)
20. தண்டையோடு பொற்சிலம்பு கால்சிலம்பு பாடகம்
குண்டு மோகன மாலை கொப்புபோல நத்து மூக்குத்தியும் நல்லமுத்து புல்லாக்கு அம்மனுக்கு வேணுமென்று கொண்டு நிறைத்தாள்
21.மல்லிகை ஜெண்பகம்மணமுள்ள மல்லிகைமகிழம்பூ
வேர்கொழுந்து கொத்தரளி மாலைகளும் கொட மல்லிகைசித்தாக செந்தாழை சிறுமடலைமாலை கட்டிவைத்து மலர் சொரிந்தாள் வரலெக்ஷிமிக்கு (ஜய)
22. கண்ணாடி கொண்டுமே காக்ஷியுள்ள மங்கையர்கள்
முன்னே நின்று காட்ட திருமுகம் தெரியவே
சொன்னபடி அலங்காரம் சுகமாக ஆச்சு
என்று சொல்லி பொன்னான வரலெக்ஷிமி
புகழ்ந்து கொண்டாள் (ஜயமங்களம்)
23. வெளிதனிலே நானிருந்தால் மேதியினியில் உள்ள
வர்கள் கண்பட்டால் திருஷ்டி கடுகிவருமே
கனகமயமாயிருக்கும் காந்தியுள்ள பொற்குடத்தில்
கடுகியிருத்தி வைத்து கருணை செய்யும் (ஜய)
24. பூஜிக்கும் பெண்களெல்லாம் பக்தியுடனே மகிழ்ந்து
பொன்குடத்தில் முத்து எடுத்துபூக்கள் நிறை
பலருக்கு ஒன்றிருக்க ஒன்றிருப்பதில்லை. காரணம் திருமகளை தக்கவைத்துக் கொள்ளவும், அவளது கருணா கடாக்ஷத்தை முழுமையாக பெற வழி தெரியாதவர்களாகவும் அதை பற்றி யோசிப்பதற்கு கூட நேரமில்லாவர்களாகவும் இருப்பதுவும் தான்.
முன்வினைப் பயனால் ஒருவர் பெருஞ் செல்வத்தை தற்போது அடைந்திருந்தாலும் அதற்குரிய பலன் முடிவடையும் போது அது குடம் கவிழ் நீர் போல ஓடிவிடும். அவ்வாறு இல்லாமல் வினையற்ற செல்வம் பல்கிப் பெருக, எங்கும் மங்களம் பெருக, லக்ஷ்மி கடாக்ஷம் நம் கிரகத்தில் நிலைக்க என்ன செய்யவேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்?
பெரியோர்கள் கூற பல்வேறு தருணங்களில் கேட்டது, சிறுவயது முதல் படித்தது, என் தாயாரிடம் கேட்டது, படித்தது, என அனைத்தையும் தொகுத்து தந்திருக்கிறேன். பின்பற்றுங்கள். பலன் பெறுங்கள். லக்ஷ்மி கடாக்ஷம் உங்கள் கிரகங்களில் நிலைக்க திருவருள் துணை புரியட்டும்.
கீழே நாம் கூறிய முறைகள் அனைத்தும் நீங்கள் முயன்றால் சுலபமாக கடைபிடிக்க கூடியவைகளே. அரைகுறையாக இவற்றை கடைப்பிடித்து வந்த நான் தற்போது கூடுமானவரை முழுமையாக கடைபிடிக்க துவங்கியிருக்கிறேன். விரைவில் சுபம் பெருகும்!
திருமகள் எவரிடத்தில் நிலைப்பதில்லை?
திருமகள் எனப்படும் மகாலக்ஷ்மி எப்போதும் ஓரிடத்தில் நிலையாக இருப்பதில்லை.இது ஏன்?என அந்த பரந்தாமனே ஒரு முறை அன்னையிடம் கேட்க, அதற்கு அவள்தர்மம் செய்யாத கருமிகள், மிருகங்களை வதைத்து உண்பவர்கள், சூதாடிகள், பரத்தை வீட்டுக்குப் போகிறவர்கள், குடிகாரர்களை கண்டால் எனக்கு பிடிக்காது.
அதிகமாக கோபப்படுபவர்கள், பொய் சொல்பவர்கள், பொறாமைக்காரர்கள், தற்புகழ்ச்சி செய்து கொள்பவர்கள், தன்னிடம் பணம் உள்ளது என கர்வபடுகிறவர்கள், ஏழைகளை கண்டு இரக்கப்படாதவர்கள் போன்றோருக்கு எனது அருள் கிடைக்காது; ஒரு வேளை வினைப் பயனால் அது கிடைத்திருந்தாலும் அது நிலைக்காதுஎன்றாள்.
இதை கேட்டு மகிழ்ந்த பரம்பொருள், இந்த அவ நடத்தைகள் இல்லாதவர்களின் வீட்டில் மகாலக்ஷ்மி கடாட்சம் எப்போதுமே இருக்கும் என்று வரமளிக்கிறேன் என்றானாம்.
அரும்பாடுபட்டு சேர்த்த செல்வத்தில் ஒரு சிறிய பங்காவது தான தர்மங்கள் செய்து வரவேண்டும். அப்போது தான் இருக்கும் செல்வம் விருத்தியடையும். எந்த சூழ்நிலையிலும் எவராலும் கவர முடியாது.
உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக கீழ்கண்டவைகளை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நடைமுறைப்படுத்துங்கள்.
சுபமஸ்து!

Comments
Post a Comment