Posts

Showing posts from June, 2023

சூரிய நமஸ்காரம்- தமிழரின் யோக பயிற்சி..!! {பாகம்-03}

Image
  இயற்கை அன்னையின் மகோன்னதமான படைப்புகளில் ஒன்று மனித உடல். நமது சாத்திரங்கள் நம் உடலை நூறு வருடங்களுக்கும் மேலாக மிகவும் சிறப்பாக, அதே வேளையில் இயல்பாகவே முறையாக இயங்கும் எந்திரமென வருணிக்கின்றன. அதே வேளையில் முறையான உணவு. உடற்பயிற்சி மற்றும் ஓய்வு ஆகியவற்றின் துணையோடு நம் உடலைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. இவற்றுள் உடற்பயிற்சி என்பதன் அடிப்படையில் ஆசனங்கள், பிராணயாமங்கள், மற்றும் தியானத்தினை உள்ளடக்கிய யோகப் பயிற்சிகள் உடலையும் மனதையும் உறுதியாக செயல்படப் பெரிய அளவில் துணை புரிகின்றன. எனவே வாழ்வில் நம்முடைய குறிக்கோளை அடைந்திட, நமது முதன்மையான கடமை, இந்த மனித உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதேயாகும். சூரிய நமஸ்காரம் என்பது ஓகப் பயிற்சிகளை உள்ளடக்கிய ஒரு முழுமையான பயிற்சியாகும். நம் இந்திய கலாசாரத்தில் மனித குலத்திற்கென, குறிப்பாக உடல், மனம் மற்றும் ஆத்மாவினை உள்ளடக்கிய தனிமனித மேம்பாட்டிற்குக் கிடைத்துள்ள ஒரு மாபெரும் பரிசு என சூரிய நமஸ்காரத்தினைக் கூறலாம். சாதி, மதம், மொழி, இனம் மற்றும் தேசியத்தையெல்லாம் கடந்த ஒரு பொதுவான பயிற்சியே சூரிய நமஸ்காரம். சூரிய நமஸ்க...

தமிழரின் மருந்தில்லா மருத்துவம்- யோகாசனம்!! {பாகம்-02}

Image
யோகா பற்றிய வரலாறு : பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சித்தர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கின்றனர். ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை (Resting Position / Posture) கொண்டு இயங்குவதை காண்கின்றனர். இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர். பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர். நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது. இதனையே இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகளாக வடிவமைக்கின்றனர். இவையே பிற்காலங்களில் யோகாசனங்கள் மற்றும் பிரணாயாமங்கள் எனப்படுகின்றன. இந்த வகையில் மயிலை அடிப்படையாக கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம் ஆகும். வடமொழியில் மயூரா என்றால் மயில் ஆகும். இதை போன்றே பிற உயிரினங்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்களின் பட்டியலை கீழே காணலாம். ஒவ்வொரு ஆசனத்தின் அருகிலும் அதற்கு அடிப்படையான வடமொழி சொல்லும், அதன் தமிழ் பொருளும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. 🔸️மகராசனம் (மகரம்–முதலை),  🔸️சலபாசனம் (சலபம் – ...

தமிழரின் மருந்தில்லா மருத்துவம்- யோகா!!

Image
  "இயற்கையுடன் இயைந்து அதன் போக்கில் வாழ்வதே ஆரோக்கியமான வாழ்க்கை. அதற்கான பாதைதான் யோகா. ‘தன்னுள் எப்படி வாழ வேண்டும்’ என்கிற சாரத்தைப் பயிற்றுவிக்கும் அறிவியல்தான் யோகா. இந்த மருந்தில்லா சிகிச்சை முறை உடல், மனம், ஒழுக்கம், உணர்ச்சி நிலைகள், ஆன்மீகக் கூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. யோகா செய்வதால் தசைகள், எலும்புகள், செல்கள் என உடலின் மொத்த உறுப்புகளும் வலிமை பெறும். யோகா குறித்து நிறைய மூடநம்பிக்கைகள் உலவுகின்றன. ‘குறிப்பிட்ட வயதினர்தான் யோகா செய்ய வேண்டும்’, ‘தொடர்ந்து யோகா செய்தால் ஆண்மைக்குறைவு ஏற்படும்’ என்றெல்லாம் சொல்கிறார்கள். இவையெல்லாம் தவறான பரப்புரைகள். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறது யோகா. ஆனால், 20-ம் நூற்றாண்டில்தான் யோகாவின் மருத்துவத்தன்மையும் அறிவியலும் வெளியுலகுக்குத் தெரியவந்தது; இதையடுத்து யோகா பிரபலமானது. யோக சிகிச்சையில் ஆசனங்கள், மூச்சுப்பயிற்சி, தியானம், பந்தா, முத்திரைகள், கிரியா யோகா உள்ளிட்டவை முக்கிய அம்சங்கள். யோகா செய்வதனால் கிடைக்கும் பயன்கள்: யோகா செய்வதால் செரிமான சக்தி அதிகரிக்கும்; மனரீதியான ஆரோக்கியமு...

தமிழரின் மருந்தில்லா மருத்துவம்- வர்ம மருத்துவம்!!

Image
 வர்மம் என்ற சொல்லுக்கு ‘உயிர் - ஆற்றல் பற்றிய அறிவியல்' எனப்பொருள். ஆதி மருத்துவக் கலையான இந்த வர்மக்கலை சிவபிரானிடமிருந்தே உபதேசிக்கப்பட்டது என்கிறார்கள் சித்தர்கள். சிவபெருமானும் பார்வதி தேவியும் ஒருமுறை மலைகளில் உலாவிக்கொண்டிருந்தபோது வேடன் ஒருவன் மயக்கமுற்று வீழ்ந்திருந்தான். அதைக் கண்ட சிவன் தன் கைப் பொற்பிரம்பால் அவனைத் தட்ட வேடன் மயக்கம் நீங்கி இயல்பு நிலைக்குத் திரும்பினான். இதைக்கண்ட பார்வதி தேவி, "என்ன நிகழ்ந்தது?" என்று வினவினாள். அப்போது மனித உடலில் ஓடும் வர்மப்புள்ளிகளையும் அவற்றின் மூலம் நோய்களைச் சரிசெய்யும் கலையையும் பார்வதி தேவிக்கு உபதேசித்தார் ஈசன்.  பார்வதி தேவி இந்த மருத்துவமுறையை முருகப்பெருமானுக்கு உபதேசிக்க முருகக்கடவுளோ அகத்திய மாமுனிக்கு அருளிச்செய்தார். அகத்தியருக்கு முருகன் வர்மக் கலையை உபதேசித்த தலம், 'வேளிமலை' என்கிறது தெட்சிணாமூர்த்தி காவியம். அகத்தியர் இந்தக் கலையை சித்தர்கள் பலருக்கும் உபதேசித்தார்.  உற்சாகமான வாழ்க்கைக்கு நோயில்லாத உடல் வேண்டும். நோயற்ற உடலைப்பெற முறையான வாழ்க்கை வாழ வேண்டும். நோய் வந்தாலும் அதை மருந்தில்லா மருத்...

சித்த மருத்துவத்தில் வெற்றி காண்பது எப்படி?

Image
 சித்த புற மருத்துவ சிகிச்சை அறையின் அமைப்பு: BSMS படித்து முடித்த உடனே புற மருத்துவ முறைகளை அடிப்படையாக கொண்டு சிகிச்சை தொடங்கினால் வெற்றி நிச்சயம். ஒவ்வொரு சித்த மருத்துவமனையிலும் கண்டிப்பாக புற மருத்துவ அறை அமைக்கப்பட வேண்டும். நோயாளிகளின் பல பிரச்சினைகளை சித்தா புற மருத்துவம் கொண்டு தீர்க்க முடியும்.  #சைனஸ் பிரச்சினைக்கு - நசியம், பற்று, புகை, வேது  #முழங்கால் வலிக்கு - சீலை, சுட்டிகை, பற்று, தொக்கணம்  #கழுத்து வலிக்கு - தொக்கணம், பூச்சு, ஒற்றடம், பற்று #தசைப்பிறட்சிக்கு - கட்டு, பற்று  #தசை பூரிப்புக்கு - பொடிதிமிர்தல், சீலை #மூலத்துக்கு - புகை, கசாய ஊறல் #மனநோயிற்கு தாரை, எண்ணெய் ஊறல் #கண்வலி, சுரத்துக்கு - கலிக்கம், பற்று #வயிற்றுவலிக்கு - வமனம், பீச்சல்  #கட்டிகள் தோல்நோய்களுக்கு - அட்டை, கீறல், குருதி வாங்கல், களிம்பு, காரப்பொடி #பௌத்திரத்துக்கு - காரத்திரி, காரநூல், சுட்டிகை என எளிய முறையில் உள் மருந்துகள் வழங்காமலேயே வளி, அழல், ஐயக் குற்றங்களை சமப்படுத்தி குணப்படுத்த முடியும்.  #தேரையர் தனது தைல வர்க்க சுருக்கத்தில் மருத்துவமனையில் #கர்ம சா...