சித்த மருத்துவத்தின் மகத்துவம் தன்னை காத்திடுவோம்..!!


''அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது''

எல்லாம் வல்ல பரம்பொருள் சிவபெருமான் தாழ்பணிந்து,
என் அப்பன் ஈசன் அருளிய சித்த மருத்துவம் தன்னை அகத்தியர் முதலாக பதிணெண் சித்தர்கள் உலகத்தாருக்கு பயன்படும் வண்ணம் கொண்டு சேர்த்தனர்.
சித்தர்கள் வழி நானும் குருவின் துணைகொண்டு உலகினர் அனைவரும் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை அறிந்து தெளிந்திட வேண்டும் என்று என் சிற்றறிவிற்கு எட்டிய வகையில் இவ் வலைதளத்தை ஊடகமாக்கி மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதை தலையாய கடமையாக கொண்டேன்.
இவ் வலைதளத்தில் சித்த மருத்துவத்தின் நெறி, சித்த மருத்துவத்தின் அடிப்படை தத்துவங்கள், சித்த மருத்துவத்தின் கோட்பாடுகள், சித்த மருத்துவத்தின் வரலாறு, சித்த மருத்துவத்தின் வளர்ச்சி, சித்த மருத்துவத்தில் நோய்நாடல், சித்த மருத்துவத்தில் நோய் தீர்த்தல், சித்த மருத்துவத்தில் மருந்து செய்முறைகள் மற்றும் சித்த மருத்துவம் கூறும் வாழ்வியல் முறைகள் பற்றிய பதிவுகள் பூரண விளக்கத்துடன் பதிவேற்றப்படும்.
இதனை தாங்களும் வாசித்து பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து தமிழ் மருத்துவத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

Comments

Post a Comment

Popular posts from this blog

மனைக்கு ஆகா விருட்சங்கள், இரவிற்கு ஆகா போசனங்கள்..

சூரிய நமஸ்காரம்- தமிழரின் யோக பயிற்சி..!! {பாகம்-03}

"தாய்ப்பால்" எனும் அருமருந்து!  உலக தாய்ப்பால் வாரம் !!