சித்த புற மருத்துவ சிகிச்சை அறையின் அமைப்பு: BSMS படித்து முடித்த உடனே புற மருத்துவ முறைகளை அடிப்படையாக கொண்டு சிகிச்சை தொடங்கினால் வெற்றி நிச்சயம். ஒவ்வொரு சித்த மருத்துவமனையிலும் கண்டிப்பாக புற மருத்துவ அறை அமைக்கப்பட வேண்டும். நோயாளிகளின் பல பிரச்சினைகளை சித்தா புற மருத்துவம் கொண்டு தீர்க்க முடியும். #சைனஸ் பிரச்சினைக்கு - நசியம், பற்று, புகை, வேது #முழங்கால் வலிக்கு - சீலை, சுட்டிகை, பற்று, தொக்கணம் #கழுத்து வலிக்கு - தொக்கணம், பூச்சு, ஒற்றடம், பற்று #தசைப்பிறட்சிக்கு - கட்டு, பற்று #தசை பூரிப்புக்கு - பொடிதிமிர்தல், சீலை #மூலத்துக்கு - புகை, கசாய ஊறல் #மனநோயிற்கு தாரை, எண்ணெய் ஊறல் #கண்வலி, சுரத்துக்கு - கலிக்கம், பற்று #வயிற்றுவலிக்கு - வமனம், பீச்சல் #கட்டிகள் தோல்நோய்களுக்கு - அட்டை, கீறல், குருதி வாங்கல், களிம்பு, காரப்பொடி #பௌத்திரத்துக்கு - காரத்திரி, காரநூல், சுட்டிகை என எளிய முறையில் உள் மருந்துகள் வழங்காமலேயே வளி, அழல், ஐயக் குற்றங்களை சமப்படுத்தி குணப்படுத்த முடியும். #தேரையர் தனது தைல வர்க்க சுருக்கத்தில் மருத்துவமனையில் #கர்ம சா...