Posts

ஸ்ரீ வரலட்சுமி விரதம் அனுஷ்டிப்பதன் மகிமை..!!

Image
ஸ்ரீ வரலட்சுமி நோன்பு (Varalakshmi Pooja) என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான ஸ்ரீ மஹா லட்சுமியின் அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் விரதமாகும். இந்த விரதம் ஆடி மாதம் வளர் பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கடைபிடிக்கப்படுகிறது.

ஆடி அமாவாசை நாளின் சிறப்பு..!!

Image
ஆடி அமாவாசை நாள் முன்னோர்களை வணங்க மிகச்சிறப்பான நாள். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும். பித்ரு லோகத்தில் இருந்து நம்மை காண வரப்போகும் நம்முடைய முன்னோர்களை எப்படி வரவேற்பது? ஆடி அமாவாசை நாளில் என்ன தானம் கொடுப்பது என்று பார்க்கலாம்.

மனமறியாத ரகசியங்கள்..!! (பகுதி-3)

Image
(விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்) இதுவரை நம் மனம் அறிய முடியாத பல அபூர்வ ரகசியங்களை பற்றி கடந்த பதிவில் அன்னமய, பிராணமய, மனோமய கோசங்கள் பற்றி பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் பற்றிய ஆழமான ரகசியங்களை பார்ப்போம்... (04) விஞ்ஞானமயகோசம் (Intelligence body)

மனமறியாத ரகசியங்கள்..!! (பகுதி-2)

Image
( மனோமய கோசம்) இதுவரை நம் மனம் அறிய முடியாத பல அபூர்வ ரகசியங்களை கடந்த பதிவில் அன்னமய, பிராணமய கோசங்கள் பற்றி பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் மனோமய கோசம் பற்றிய ஆழமான ரகசியங்களை பார்ப்போம்... (3) மனோமய கோசம் (Mental body)

மனமறியாத ரகசியங்கள்..!! (பகுதி-1)

Image
(அன்னமயகோசம், பிராணமயகோசம்) இதுவரை நம் மனம் அறிய முடியாத பல அபூர்வ ரகசியங்களை இப்போது புரிந்து கொள்ள போகிறோம். இந்த பிரபஞ்சத்திலும், இந்த உலகத்திலும் காணப்படும் அதிசயங்கள் அனைத்தும், மனித உடலிலும் இருப்பதாக சித்தர்கள் அனுபவமாக சொல்லியுள்ளனர். அதனை குறிப்பிடும் வகையில் "அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில்" என்ற வாக்கியம் உருவானது.

எண்ணிலடங்கா சித்திகளைபெற பிராணாயாமம்..!!

Image
பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரும் தாயின் கருப்பையிலிருந்தே சுவாசிக்க தொடங்கிவிடும். இயற்கையின் படி ஒவ்வொரு உயிருக்கும் வாழ்வில் இத்தனை சுவாசம் என்ற கணக்கில் இருப்பதாகவும், அந்த காலம் முடிந்தவுடன் பிராணன் உடலை விட்டு நீங்கி விடுவதாகவும் புராணங்கள் சொல்கின்றன. ஆனால் இந்த மூச்சை மிகச் சரியான முறையில் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் நீண்ட காலம் உயிருடன், ஆரோக்கியமாக வாழ முடியும். மிகச்சிறந்த சுவாச பயிற்சிகள் மூலம் எண்ணிலடங்கா சித்திகளை கூட பெற முடியும் என்கிறார்கள் சித்தர்கள்.

சைவசித்தாந்தம் என்பது யாது..?

Image
சைவசித்தாந்தத்தை “சைவசமய சாத்திரம்” எனவும் “மெய்கண்ட சாத்திரம்” எனவும் வழங்குவர். சைவம் சிவசம்பந்தம் உடையது. சித்தாந்தம் முடிந்த முடிபு என்பது. எனவே சைவசித்தாந்தம் என்றால் “சைவசமயத்தின் முடிந்த முடிபு” என பொருள் தருவது. அது உண்மையைக் கண்டது. உண்மையைக் கண்ட உத்தமரால் உரைக்கப்பெற்றது. அந்த உரை உபதேச வாயிலாக பரம்பரையாக நமக்குக் கிடைக்கப் பெற்றது.

சித்த மருத்துவத்திற்கும் சிவனிற்கும் இடையிலான தொடர்பு..!!

Image
சைவப்பேரறிவியலை வரைந்த சித்தர்களே சித்த மருத்துவத்தையும் வரைந்தனரெனின் சைவப்பேரறிவியலில் கூறிப் போந்த நுட்பங்களையும் மருத்துவத்திற்குப் பொருந்துமளவில் அமைத்து வரைந்தனரெனக் கூறுதல் மிகையாகா.

சித்தர் என்பார் யாவர்..?

Image
அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, பிறரின் நலன்களை மட்டுமே மனதில் வைத்து சேவை செய்த மகான்களைத் தான் நாம் சித்தர்கள் என்கின்றோம். இதனை அகத்தியர் கீழ்வருமாறு கூறுகின்றார்.

சித்தமருத்துவத்தின் "எண் வகைத் தேர்வு" அல்லது "பிணியறி முறைமை" என்றால் என்ன..?

Image
''பிணியறி முறைமை'' என்பது உடலைப் பிணித்தலாய நோயைத் தெரிந்துகொள்ளுகின்ற ஒழுக்கம் எனப்படும். விதியும் ஒழுக்கமும் :  இது, பொறியாற்றேர்தல் ; புலனாலறிதல் ; வினாதல் என்னும் விதிகளையும், அவற்றைத் துணையாகப் பற்றி ஒழுகும் ஒழுக்கங்களையும் குறிக்கும்.